Monday, November 8, 2010

எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்

 இமாம் அபு ஹனீஃபா ( ஹனஃபி மத்ஹபின் ஸ்தாபகர்) இமாமுல் அஃலம்  ( அதாவது உலகிற்கே இமாம்) ( ஹனஃபி மத்ஹபு தான் மத்ஹபுகளிலே அதிகமாக மக்களால் பின்பற்றப்படுவதால் பெரியது)  அவங்களே சொல்லலே அப்ப எப்படி நான் ஃபாலோ செய்ய முடியும் என்றார்.

 நபி ஸல் அவர்களின் உறுதியான செயல்முறை என்கிறோம் மேலும் மற்றொரு மத்ஹபான ஷாஃபி மத்ஹபில் வலியுறுத்தப்பட்டு ஷாஃபி மத்ஹபை பின்பற்றுபவர்களால் தொழுகையிலும் செயல்படுத்தப்படுவதை சொன்னாலும் மேலும் அதில் உள்ள அனுகூலங்களைச் சொன்னாலும் அவருக்கு அதில் உடன்பாடில்லை....... ஹனஃபி இமாம் சொல்லாததால்.

மெத்தப் படித்தவர் மேன்மையான பதவியிலிருப்பவர் ஆனாலும் யோசிக்க வில்லை.   நாளைக்கு  அல்லாஹ் நம்மையெல்லாம் ஹனஃபி முஸ்லீம்கள் எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள் ஷாஃபி முஸ்லிம்கள் எல்லாம் இந்தப் பக்கம்  ஹம்பலி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் மாலிக்கி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் என்றா சொல்வான். 

இது மனதில் ஓடிக்கொண்டிருந்த போது தான் இஸ்லாமிய நாடுகளில் உள்ள மாற்று மதத்தவர்கள் ஏன் பெருமளவில் இஸ்லாத்தை தழுவுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது.


மனிதன் ஒரு வித்தியாசமானப் படைப்பு.  வேஷ்டியை தூக்கி எறிநது விட்டு அவன் பெர்முடா அணிவான். பொங்கலுக்கு பதிலாக பிஸ்ஸா சாப்பிடுவான் ஆனால் மதம் என்று வந்து விட்டால் விட்டுக் கொடுக்கவே மாட்டான்.

அதனால்தான் எத்தனையோ நபிமார்கள் ஒரிறைக் கொள்கையை எத்திவைக்க மிகுந்த சிரமப்பட்டார்கள்.

இந்த இஸ்லாமிய நாட்டில் பல முஸ்லிம் அல்லாதார்கள் இருக்கிறார்கள். நான் எண்ணுவேன் இந்த நாட்டில் ஒரு சின்ன முஸ்லிம் பிள்ளை கூட ரோட்டில் சிறுநீர் கழிக்க மாட்டேங்கிறது.  நமது நாட்டிலே சின்னவர்களிலிருந்து பெரியவர்கள் வரை ரோடில் கழிக்கிறார்கள்.  இந்த முஸ்லிம் அல்லாதார்கள் அதை சிந்திந்தால் கூட இந்த இசுலாத்தின் மகத்துவம் புரிந்து அதை ஏற்பார்களே என்று.   அதைப் போல் இறுக்கமான ஆடையணிந்து ஒரு பெண் செல்கிறாள் அவளைக் காமக்கண்ணோடு கண்டு இன்புறுகிறான்.  அவளைத் தொடர்ந்தே மற்றொரு பெண் முழுவதும் புர்கா அணிந்து செல்கிறாள் அவளின் அங்கமெதுவும் அவன் கண்ணில் படவில்லை  அதுமட்டுமா இந்த உன்னதமாக இசுலாத்தின் கற்புநெறியும் ர்கள் கண்ணில் படவில்லை அதை யோசித்தார்கள் என்றால் அடுத்த கணமே முஸ்லிமாயிடுவார்கள்........  ஏன் ?

இது அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும்...கட்டுரையின் தொடர்ச்சி


With best regards
Kamal
by mail from Kamal

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails