Monday, October 4, 2010

நான் இறந்துபோயிருந்தேன்.


தலைப்பை தந்து எழுதச்சொன்னாங்க எழுதியாச்சி.
நான் இறந்துபோயிருந்தேன்

சொந்த நாட்டிலேயே
சுதந்திரம் பறிக்கப்பட்டு

நீதியை நம்பி
அநீதி இழைக்கப்பட்டபோது.
சிறுபான்மையினம் தானேயென
சீண்டிப் பார்த்து சிதைத்தபோது.

முழு பூசணிக்காயை மறைத்து
மூன்றிலொரு பாகமென-கட்டப்
பஞ்சாயத்து செய்தபோது

வேற்றுமையில் ஒற்றுமையென
வேரத்து வீதியிலெறிந்தபோது.

சமரசமெனச் சொல்லி
சாட்டையடிக் கொடுத்தபோது.

நாடுவிட்டு நாடு
பிழைப்பை தேடிவந்த மக்கள்- மீண்டும்

நாடு திரும்பும்போது
இருக்கயிடமிருக்குமா? சொந்த நிலமிருக்குமா

இல்லை
இந்தியரென்ற பேராவதிருக்குமாயென

ஐயமெழ வைத்துவிட்டதை நினைக்கும்போது
உயிரிருந்தும் நான் இறந்துபோயிருந்தேன்

உயிரோடுயிருக்கும் நீதியாவது
இறந்துவிடக்கூடாதென்ற ஆதங்கத்தில்...

டிஸ்கி//பாரத்... பாரதி... "நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை... நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின் இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு, இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத் தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..//
என சவால் விட்டுட்டாங்க நமக்கு தெரிந்ததை இங்கேயும் அங்கேயும் எழுதியிக்கோமுங்க. எப்படியிருக்கு..
இதோ இங்கு இதேதலைப்பில் ஒரு உணர்வுக்கவிதை

. அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
Source : http://niroodai.blogspot.com/2010/10/blog-post_04.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails