Thursday, October 7, 2010

இஸ்லாமிய சட்டத்தின் ஆதாரங்கள


குர் ஆன் - ஆண்டவனால் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஹதீஸ் - பெருமானாரின் போதனைகள்
இஜ்மஃ - மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு
கியாஸ் - தனிமனிதன் யூகித்துணரும் அனுமானம்

நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை கஷ்ட்டப்பட்டு தொகுத்தவர்கள்(முஹத்திதுகள்) ஆறு பேர்.

1.இமாம் புஹாரி
2.இமாம் முஸ்லிம்
3.இமாம் திர்மிதி
4.இமாம் அபுதாவூத்
5.இமாம் நஸயீ
6.இமாம் இபுனு மாஜா

இந்த ஆறு பேரின் தொகுப்பும் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்.

இமாம் புஹாரி (ரஹ்)
***************************
பிறந்த இடம் - குராஸான் பிரதேசம்
பிறந்த ஆண்டு - ஹிஜ்ரி194 ஷவ்வால் பிறை13
இயற்பெயர் - முஹம்மத்
இறந்த ஆண்டு - ஹிஜ்ரி256 ரமலான்மாதம்
ஹதீஸ் தொகுப்பு - இஸ்லாமிய உலகின் பல பாகங்களுக்கும் சென்று40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஹதீஸ் தொகுத்தவர்.600000 ஹதீஸ்களை சேகரித்து 4000 ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்
ஹதீஸ் நூலின் பெயர் - ஸஹீஹ் புஹாரி

இமாம் முஸ்லிமா(ரஹ்)
****************************
பிறந்த இடம் - நைஷாபூர்
பிறந்த ஆண்டு - ஹிஜ்ரி 204
இயற்பெயர் - அபுல் ஹுசைன் முஸ்லிம்
இறந்த ஆண்டு - ஹிஜ்ரி 261
ஹதீஸ் தொகுப்பு - இராக்,சிரியா,எகிப்த்,ஆகிய நாடுகள் சென்று 3 லட்சம் ஹதீஸ்கள் சேகரித்தார்.300000 ஹதீஸ்களை சேகரித்து 9200 ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்.
ஹதீது நூலின் பெயர் - ஸஹீஹ் முஸ்லிம்
இமாம் அபூதாவூத்(ரஹ்)

*****************************
பிறந்த இடம் - ஸிஜிஸ்தான்
பிறந்த ஆண்டு - 203ஹிஜ்ரி
இறந்த ஆண்டு - 275ஹிஜ்ரி
இயற்பெயர் - சுலைமான்
ஹதீஸ் தொகுப்பு - இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்)அவர்கள் தான் இவரின் ஆசிரியர்.கிட்டத்தட்ட 5 லட்சம் ஹதீஸ் சேகரித்து 4800ன் ஹதீஸ்களை புத்தகமாக வெளியிட்டார்கள்.500000

இமாம் நஸயீ(ரஹ்)
***********************
பிறந்த இடம் -குராஸான் பிரதேசம் நஸ்க்
பிறந்த ஆண்டு -214 ஹிஜிரி
இறந்த ஆண்டு -303
இயற்பெயர் -அஹ்மத்
ஹதீஸ் தொகுப்பு - பலரிடம் இருந்து தொகுத்தார்.முக்கியமாக ஹுதைபா பின் ஸயீத்.

இமாம் திர்மிதி(ரஹ்)
*****************************
பிறந்த இடம் -திர்மிதி
பிறந்த ஆண்டு -209 ஹிஜிரி
இறந்த ஆண்டு -279 ஹிஜிரி
இயற்பெயர் -முஹம்மத்
ஹதீஸ் தொகுப்பு - பல பிரதேசங்கள் சென்று ஆங்காங்கே
கிடைத்த ஹதீஸை சேகரித்தார்.50000 ஹதீஸ்களை சேகரித்து 1600ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்.

இமாம் இபுனு மாஜா(ரஹ்)
**********************************
பிறந்த இடம் -கஃஸவின்
பிறந்த ஆண்டு -209 ஹிஜிரி
இறந்த ஆண்டு -279 ஹிஜிரி
இயற்பெயர் -முஹம்மத்
ஹதீஸ் தொகுப்பு - சிரியா,மக்கா,பஸ்ரா,பக்தாத்,கூஃபா முதலான இடங்களுக்கு சென்று ஹதீஸ்களை சேகரித்தார்.

ஹதீஸ்களின் பெயர்கள்
******************************
கொவ்லி - இறைத்தூதர் தன் திருவாயால் கூறியவை
பிஃலி - இறைத்தூதரின் செயல்களை ஸஹாபாக்கள் தம் வாயால் கூறியவை.
தஃரிரி - இறைத்தூதரின் முன்னிலையில் செய்யப்பட்டவை.
ஹதீஸ் நபவி - இறைத்தூதர் பொதுவாக கூறியவை
ஹதீஸ் குத்ஸீ - அல்லாஹ் கூறியவை
 Source : http://allaaahuakbar.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails