Sunday, August 1, 2010

அமெரிக்காவில் 'குர்ஆன் வழங்கல்' எனும் தலைப்பிலான நாள் அனுஷ்டிப்பு

அமெரிக்காவில் 'குர்ஆன் வழங்கல்' எனும் தலைப்பிலான நாள் அனுஷ்டிப்பு
சர்வதேச குழு: வாஷிங்டன் - இக்னா: அமெரிக்க இஸ்லாமிய நட்புறவுச் சங்கம், அல்குர்ஆன் வழங்கல் எனும் தலைப்பிலான நாளொன்றைப் பிரகடனப்படுத்தி, அந்நாளில் பல்லாயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், அதன் போதனைகளை மக்கள் பின்பற்றி நடக்க வழிசெய்யவும் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. 
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இவ்வாறான ஒரு சேவையை மேற்கொள்வதற்கு, அமெரிக்க இஸ்லாமிய நட்புறவுச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. குர்ஆன் வழங்கல் எனும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்தி, அந்நாளில் இந்த ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகள் விநியோகிக்கப்படடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2001ம் ஆண்டு இடம்பெற்ற செப்டம்பர் தாக்குதலின் விளைவாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புணர்வு மற்றும் அவநம்பிக்கை போன்றவற்றைக் களையும் நோக்கில் இச்சேவை ஆற்றப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அல்குர்ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சரியான விளக்கத்தை முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனையோரும் விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மை, அதன் விளைவாக குர்ஆன் எரிக்கப்பட்டமை போன்ற அசம்பாவிதங்களை எதிர்காலத்தில் தவிர்க்கும் நோக்குடனும் இரு சமூகங்களுக்கும் மத்தியில் நட்புறவையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் நோக்குடனும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails