Tuesday, August 3, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்கத் திருத்தங்களுடன் நடை முறைப்படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேசிய பொது செயலாளர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசியச் செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பொதுச் செயலாளர் பி.கே. குஞ் ஞாலிக்குட்டி உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

1. இந்தியாவின் மதச்சார் பற்ற ஜனநாயக கட்ட மைப்பு சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க திட்டமிடும் தீய சக்திகளின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக இந்திய முஸ்லிம்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொள்கிறது.

பல்வேறு நம்பிக்கை களை கடைப்பிடிக்கும் மக்கள் சமாதான சகவாழ்வுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை மதத்தின் பெயரால் பல்வேறு வன்முறை களின் மூலமாகவும், அபா யகரமான கொள்கைகள் மூலமும் வெறுப்பையும், துவேஷத்தையும் ஏற்படுத்த பயங்கரவாத அமைப்புகளின் எடுபிடிகளாக செயல்படுபவர்களின் பயங்கர முயற்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.

2. 1948-ம் ஆண்டு இந்திய முஸ்லிம் சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஸ்தாபனத் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களும் வழிகாட்டியபடி மதச்சார்பற்ற ஜனநாயக நோக்கங்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கையுடன் உறுதி கொண்டுள்ளது.

3. சிறுபான்மையினர் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது பாசிச சக்திகள் கட்ட விழ்த்து விட்ட வன்முறை மற்றும் பயங்கரவாத தாக் குதல்களுக்கு இந்த கூட்டம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடுமை களினால் சிறுபான்மையினர் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவிக்கவேண்டிய திருப்பதை தொடர்ந்து நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச சக்திகள் நடத்தும் குற்றங்களுக்கு எதிராக பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்தியப் புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான் மையினருக்கு எதிராக பாசிச சக்திகள் நடத்தும் வன்முறைகளை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கை களையும் உறுதியுடன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

4. சிறுபான்மையின சமுதாயத்தின் நன்மைக்காக மத்திய அரசு கொங்ணடு வந்துள் சமூக நலத் திட்டங்களை வலுவாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட சமுதாயத்தின் சமூக மற்றும் கல்வி நிலையில் உள்ள இடர்ப் பாடுகளை போக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுகிறது.

5. சிறுபான்மையினருக்காக மத்திய அரசின் நலத் திட்டங்கள் கேரள மாநிலத்தில் இன்று நடைமுறைப் படுத்தவில்லை என்று சுட்டிக் காட்டுவதோடு, கேரள மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத் தினருக்கான நலத் திட்டங்களை நடை முறைப் படுத்துவதில் கேரள அரசு தவறிவிட்டது என்பதையும் இக் கூட்டம் வலியுறுத்தி கூறுகிறது.

6. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு சிறுபான் மையினரின் முன்னேற்றத்திற்கான நீதியரசர் ராஜேந்தர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உறுதியுடன் நடைமுறைப் படுத்த அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளின் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், சகிப்புத் தன்மை, அமைதி, மதநல்லி ணக்கம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டும் இந்தியாவில் மற்ற சமூகங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவும், மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் உறுதியை காப்பாற்ற உழைக்கவும் இந்திய முஸ்லிம்களை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

8. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தொடர்வதில் பெருமை கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையை தயக்கமின்றி ஆதரிப்பதையும், பாசிச சங்பரிவார் அமைப்புகள் மற்றும் காலாவதியான கொள்கைகளை கொண்ட கம்யூனிஸ்டுகள் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசு போராடுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது ஆதரவை நல்கும் என இச் செயற்குழு உறுதி ஏற்கிறது.

பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் சமூக நீதி மற்றும் கவுரவமான வாழ்க்கையை முஸ்லிம்கள் அடைய தொடர்ந்து போராட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வற்புறுத்துகிறது.

9. உறுதியான பொருளாதாரப் பாதையில் தேசம் முன்னேற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் போற்றத் தக்க நடவடிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது. அதேநேரத்தில் வளர்ச்சியின் பலன்கள் மிகவும் ஏழையாக உள்ளவர்களுக்கு போய்சேர வேண்டும். 30 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழே துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், கிராமப் புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது.

வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களிலும் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பன்முக வேளாண்மை, தொழில் மற்றும் வர்த்தகத் திட்டம் போன்றவை முனைப்புடன் செயல் படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.

10. ஏழைகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வருமானம் கொண்டவர்களுக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவலை கொள்கிறது. போதிய பயனை கொடுக்கும் வகையில் பொது விநியோகத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டப்பூர்வ மான உணவு தானிய விநி யோகம் பலப்படுத்த வேண் டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஒழுங்கு படுத்தும் வகையில் சந்தையை அரசுகள் கட் டுப்படுத்தவது அவசியம் என்பதை இச் செயற்குழு சு.ட்டிக் காட்டுகிறது.

11. நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது. முஸ்லிம் மாணவர்களுக்கு பொருளாதார உதவிகள், 15 அம்சத் திட்ட நிறைவேற்றம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நன்மைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.

ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளன. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதியை எவ்வளவு விலை கொடுத்தும் நிலை நிறுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்கும்படி மத்திய அரசு வழி காட்ட வேண்டும்.

ஏற்கனவே உறுதியளித்த சமூக வாய்ப்புகள் ஆணையம் இன்னமும் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறு பான்மை நலத்துறை சிறப்பாக தனது கடமைகளை நிறைவேற்றும் வகையில் போதிய அதிகாரம் வழங்கப்பட மத்திய அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.

வஃக்பு வாரிய நிர்வாகம், ஹஜ் பயண நிர் வாகம் ஆகியவற்றை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக் கும்படி அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

12. கல்வி உறுதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கான உரிமையை அமல்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்களை திறக்க போதிய திட்டங்கள் தீட் டப்படவேண்டும். முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட் டம் வழங்கியுள்ள சிறு பான்மையினர்களுக் கான கல்வி உரிமைகளை உள் நோக்கத்தோடு தவறாக வழிகாட்டப்பட்ட சிலர் தடுக்க முயல்வதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண் டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

13. பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களுக்கு உள்ள குறைந்த பிரதிநிதித்துவம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவலை தெரிவிக்கிறது.

தேசத்திலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 13 சதவீதமாக இருக்கின்ற போது மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 5.5 சதவீதமாகவே உள்ளது. அதேபோன்று மாநில சட்டப் பேரவைகளிலும் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. நமது ஜனநாயக ஆட்சி முறை ஆரோக்கியமாக செயல்பட நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழு வலியுறுத்துகிறது.

14. கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்க வழி செய்யும் வகையில் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்க திருத்தங்களுடன் மிக விரைவாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூறினார்.
http://www.inneram.com/201008039740/resolutions-passed-in-iuml-national-council-meet

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails