Monday, August 16, 2010

உம்ரா விசா 16% அதிகரிப்பு! சவூதி அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சௌதி அரேபியா மக்காஹ் நகரில் உள்ள புனித காபாவிற்கு புனித பயணம் செய்கிறார்கள். இதை 'ஹஜ்' என்கிறார்கள்.
இது பிறை அடிப்படையில் உள்ள இஸ்லாமியா காலெண்டரில் கடைசி மாதமான துல்-ஹஜ்ஜில் பிறை 8 முதல் 12 வரை அனுசரிக்கப்படும். இதுதான் உலகிலேயே அதிக மக்கள் மேற்கொள்ளும் புனித பயணம் ஆகும்.
இந்த நாட்கள் இல்லாமல் வருடம் முழுவதும் உள்ள மற்ற நாட்களில் அங்கு புனித பயணம் மேற்கொள்ளவதை 'உம்ராஹ்' என்கிறார்கள் அதாவது சிறிய புனித பயணம் ஆகும். நாளுக்கு நாள் புனித பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதன் அடிப்படையில் முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமழானில் சென்ற ஆண்டு 6,74,000 பேர் இந்த உம்ராஹ் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த வருடம் 7,92,000 விசா வழங்க திட்டமிட்டுயிருந்தது சவுதி அரேபியா அரசாங்கம், ஆனால் உலகம் முழுவதும் இந்த உம்ராஹ் பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் மேலும் அதிக விசா கோரியுள்ளதால் இந்த வருடம் சவுதி அரேபியா அரசாங்கம் 16% அதிக விசா அதிகரித்து 9,11,000 விசா வழங்கியுள்ளது.
மேலும் 'ஹஜ்' பயணத்திற்கு இந்த வருடம் 40,00,000 பேர் வரை எதிர்பார்க்கப்பட்டு அதற்கான தங்குமிடம், சுகாதாரம் ஆகியவற்றிக்கு சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails