Wednesday, July 28, 2010

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

from    mohdali naseer
பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான்.  இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது.  இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.  இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails