Tuesday, July 27, 2010

ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் மாவட்டக் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோட்டமாளம் பகுதியை சேர்ந்த மாத்தி என்பவரது பேத்தி வினிதா சில நாட்களுக்கு முன்பு கொல்லையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண் குடுவை ஒன்று தெரிந்துள்ளது.அதில் தங்க நாணயங்கள் இருந்துள்ளன.
இத்தகவல் காட்டுத்தீ போல் அக்கம் பக்கத்தில் பரவியதால், கோட்டமாளம் பகுதி மக்கள் தங்க நாணயத்தைப் பார்க்க கூட்டங்கூட்டமாக வந்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதையலிலிருந்த 400 மில்லி கிராம் எடை கொண்ட சுமார் 744  தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் கொடியும் மற்றொரு பக்கத்தில் எட்டு சிறிய புள்ளிகளும், இரு பெரிய புள்ளிகளும், இரு பிறைவடிவமும் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று கணிக்கப்படுகிறது. இவை மைசூர் வேங்கை திப்பு சுல்தான் கால நாணயங்கள் என்று தெரிகிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails