Tuesday, July 20, 2010

ஆப்கன் அமைதி நடவடிக்கையில் தாலிபான்களை ஈடுபடுத்த உலக நாடுகள் ஆதரவு!


ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தாலிபான்களை ஈடுபடுத்த ஆப்கானிஸ்தான் அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் அரசின் அமைதி மற்றும் ஒற்றுமைத் திட்டங்கள் ஆயுதம் ஏந்திய அரசுக்கு எதிரானவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது. ஆயுதம் ஏந்திய போராளிகள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்களாகவும் ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்களாகவும் அமைதியான ஆப்கானிஸ்தானைக் கட்டியெழுப்ப அரசுடன் இணைந்து செயலாற்ற விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஆப்கானிஸ்தானில் கூடியுள்ள சர்வதேசத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாலிபான்கள் ஆயதங்களைக் கைவிட்டு அமைதி நடவடிக்கையில் இணைந்து செயல்பட வருமாறு தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
http://www.inneram.com/201007209401/india-us-back-taliban-involvement-in-afghan-peace-process

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails