Saturday, July 3, 2010

இட ஒதுக்கீடு கோரி ஜூலை 4ல் முஸ்லிம்கள் பேரணி: தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

"ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, வரும் 4ஆம் தேதி, சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படும்,'' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜைனுலாபுதீன் தலைமை வகித்தார். மூத்த பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்களும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கருத்தரங்கம் முடிவில், ஜைனுலாபுதீன் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ், தேர்தல் அறிக்கையில் கூறியது. இதை நம்பி முஸ்லிம்கள், காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பிரதமர், "அனைத்துக் கட்சிகளிடம் ஒத்த கருத்து வந்த பிறகு இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, கூறியுள்ளார். பிரதமர், தரமாட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறார். எனவே, ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, சென்னையில் வரும் 4ம் தேதி பேரணி மற்றும் மாநாடு நடத்துகிறோம். இது கோரிக்கை மாநாடு அல்ல; உரிமை மீட்பு மாநாடு. எங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கும் மாநாடாக இருக்கும். மத்திய அரசு அலட்சியம் காட்டினால், முஸ்லிம்கள் ஓட்டு இனி, காங்கிரசுக்கு இல்லை என அறிவிப்போம். இந்தியா முழுவதும் இந்த கருத்தை முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு ஜைனுலாபுதீன் கூறினார்.
Source : http://www.inneram.com/201007039151/muslims-demand-10-reservation

1 comment:

ராஜவம்சம் said...

இன்ஸா அல்லாஹ் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails