Saturday, July 17, 2010

25 இலட்சம் முஸ்லீம்கள் பேஸ் புக்கிலிருந்து வெளியேற முடிவு?

இலண்டன் : சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றான பேஸ்புக்கில் 4 பிரபல இஸ்லாம் சம்பந்தப்பட்ட தொகுப்புகளை நீக்கியிருப்பதை அடுத்த பேஸ்புக் பயன்படுத்துவதை பரீசிலனை செய்ய 25 இலட்சம் முஸ்லீம்கள் முடிவு செய்திருப்பதாக டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவிக்கின்றது.

இணையதளங்களிலும் பேஸ்புக் முஸ்லீம் இணையதள உபயோகிப்பாளர்கள் சார்பாக பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜீக்கர்பர்க் இலட்சக்கணக்கான முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மேலும் உலகின் மிக சிறந்த பல்கழைகழகத்தில் தொலை தொடர்பில் பட்டம் பெற்றிருந்த போதிலும் முஸ்லீம் உலகில் வெறுக்கப்பட கூடிய மனிதராக, பேஸ்புக்கிற்கும் முஸ்லீம்களுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த கூடிய மனிதராக மார்க் உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட பக்கங்கள் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று கோரும் அக்கடிதம் சமீபத்தில் பேஸ்புக் முஹம்மது நபியின் கார்ட்டூன் வரையும் போட்டி நடத்திய பொறுப்பற்ற செயலையும் கண்டித்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் இஸ்லாமிய சின்னங்களை வெளியிடுவதற்கு முன் அவை முஸ்லீம்களின் உணர்வுகளை காயப்படுத்துமா என்பதை கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா பட்சத்தில் 25 இலட்சம் முஸ்லீம்களும் பேஸ்புக்கிலிருந்து வெளியேறி மதீனா.காமில் உறுப்பினராகி விடுமோம் என்று எச்சரித்ததோடு பெண்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Source :http://www.inneram.com/201007179345/25-lakh-muslims-threaten-to-leave-facebook

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails