Monday, June 21, 2010

குடியிருப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும் - தீர்மானிப்பது கட்டிட உரிமையாளர்கள் ?!

 
மும்பையில் மாமிசம் உண்பவர்களுக்கு கட்டிடம் வாங்க அனுமதி மறுக்கப்படுவது புதிதல்ல என்றாலும் தற்போது  இன்னும் ஒரு படி மேலே போய் கட்டப்பட்டிருக்கும்  கட்டிடத்தில் வாடகை சம்பந்தமாக கூட மாமிசம் உண்பவர்கள் அணுக வேண்டாம் என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜ்பவனுக்கு  அருகில் உள்ள வண்டனில் 2005-ல் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு  கொண்டு இருக்கும் 43 மாடி கட்டிடத்தில் தான் இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சேட்டிலைட் டெவலப்ப்ர்ஸால் கட்டப்பட்டு வரும் இக்கட்டிட உரிமையாளர் கல்பனா ஷா. 7900 சதுர அடி கொண்ட ஒவ்வொரு பிளாட்டும் 60 கோடி விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேட்டிலைட் டெவலப்பர்ஸின்  வியாபார அலுவலர் சமீர்  கேரா கூறும் போது "இங்குள்ள பகுதிகளில் பெரும்பாலும் குஜராத்திகள், ஜைனர்கள், மார்வாடிகள் தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களாகவே உள்ளதால் இவ்வாறு விளம்பரம் கொடுத்தோம் என்றார்.
தற்போதைய உரிமையாளரிடம் 2005-ல் 105 கோடிக்கு விற்கப்படும் இக்கட்டிடம் மாமிச உணவு உண்ணும் மும்பை சமாச்சார்  பத்திரிகை உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும் இவ்விரண்டு மாடி கட்டிடத்தில் தான் 1977-ல் அமர் அக்பர் அந்தோனி படத்தின் ஷீட்டிங் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகழ் பெற்ற  சமூகவியலாளர் ஃபரீதா லம்பி  இது குறித்து கூறும் போது தாங்கள் சார்ந்துள்ள மதம் மற்றும் ஜாதியின் காரணத்தால் வீடு மறுக்கப்படுவது உண்மை தான் இது போன்ற விளம்பரங்கள் ஒரு வகுப்பாரின் பணத்திமிரை காட்டுவதாகவே உணர்வாதாக கூறினார். மேலும் சிலர் மாமிசம் உண்ணும் 95% இந்தியர்களை புறக்கணித்து 5% சைவர்களாக இருக்கும் உயர் ஜாதியினருக்காகவே கட்டப்படுவதாக கூறினர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails