Tuesday, June 29, 2010

சிக்கன் - 65

By:புதைனாசிக்கன் - 65
சிக்கன் - 65 எவ்வாறு தயாரிப்பது


சிக்கன் - 65

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்

இஞ்சி - 25 கிராம்

பூண்டு -4 பல்

மிளகுத்தூள் -1 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- தேவையான அளவு.

மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி

மசாலா பொடி -2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

(மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்).

செய்முறை:

1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும்.
2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
3. மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,மசாலா பொடி,உப்பு என அனைத்தையும் இஞ்சிப் பூண்டு விழுதுடன் கலந்து கொள்ளவும்
4. இந்தக் கலவையை சிக்கனில் நன்றாகப் பிரட்டி பிசிறி இரண்டு மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்கவும்.
5. வாணலியில் எண்ணை ஊற்றி ஊறிய சிக்கன் துண்டுகளைப் போட்டு பொறித்தெடுக்கவும்.


தோழி
புதைனா

http://labbaikudikadu.com/pages/food_recipes_detail.aspx?id=42F8A7F7-B0B1-4238-8194-663F6B6ABA06

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails