Monday, May 10, 2010

P.J. குர் ஆன் மொழி பெயர்ப்பு பற்றி அப்துல்லாஹ்


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

பீ.ஜெ. யாகிய உங்களின் தமிழாக்கத்தையும் நூல்களையும் நான் படித்துள்ளேன். இன்னும் பலருடைய தமிழாக்கத்தையும் வாசித்துள்ளேன். எல்லாத் தமிழாக்கத்திலும் உங்கள் தமிழாக்கம்தான் முஸ்லீம் அல்லாதாரையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதாக உள்ளது என்று நான் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறேன்.
மஸ்ஜித்களில் நடந்த கூட்டங்களில் மனிதர்கள் இரண்டு வகையில் உள்ளனர். இஸ்லாத்துக்கு வந்தவர்கள்.  வர இருப்பவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளனர். இஸ்லாத்திற்கு வர இருப்பவர்களுக்கு குர்ஆனை கொடுக்க விரும்பினால் பீ.ஜெ மொழிபெயர்த்து மூன் பப்ளிகேசன் வெளியிட்ட தமிழாக்கத்தை கொடுங்கள் அது தான் குர்ஆனை விளங்கும் வகையில் எளிதாக உள்ளது என நான் கூறினேன்.
உங்களுடைய தமிழாக்கத்தில் உள்ள 26 ஆம் பக்கம் ஒன்றே போதும் (எட்டாவது பதிப்பில் 29 ஆம் பக்கம்) இதில் எடுத்துக் காட்டும் சான்றுகளை ஒருவன் படித்தால் அவனை இஸ்லாம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
எத்தனையோ தமிழாக்கங்களில் சிந்திப்பது இதயம் என்று மொழிபெயர்த்த இடங்களில் நீங்கள் உள்ளம் என்று மொழிபெயர்த்து உள்ளீர்கள். இதயத்திற்கும், சிந்தனைக்கும் எந்தச் சம்ம்ந்தமும் இல்லை. இது சிறப்பாக உள்ளது.
 அது போல அலக் என்பதற்கு அட்டைப் பூச்சி என்றும் தொங்கிக் கொண்டிருப்பவை என்றும் பலவாறாக  விளங்காமல் மற்றவர்கள் மொழிபெயர்த்திருக்கும் போது கருவுற்ற சினை என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளீர்கள். இதை எல்லாம் நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன்.

Dr.  அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails