Friday, May 28, 2010

கவிதை : காய்க்காத அத்திமரம்

By சேவியர்

விரும்பாமலேயே
வாய்த்து விடுகிறது
பலருக்கும்
குழந்தைப் பாக்கியம்.
நாள்காட்டிகளின்
சுட்டுவிரல்
கணக்குகளில் பிசகியோ,
விசாரணைக்குரிய
பாதுகாப்புக்
கவசங்களின் கண்களில்
மண்ணைத் தூவியோ,
மோகத்தின்
முணுமுணுப்புகளில்
மறைந்து போன
எச்சரிக்கை உணர்விலோ,
ஏதோ ஒன்றில்
நழுவி விழுகின்றன
இந்த
மண்ணின் வரங்கள்
சாபங்களாக.
இந்த வானக வரங்களை
சாபங்களாகச் சித்தரிப்போர்
சந்தித்தல் நலம்.
மரத்தில் தொட்டில் கட்டி
கண்களில்
மதகு உடைத்துக் கரையும்
வேண்டுதல் ஒலிகளை.

http://xavi.wordpress.com/2010/04/21/child-5/கவிதை : காய்க்காத அத்திமரம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails