Thursday, May 13, 2010

நாகூர் ஹனிபாவின் தேச உணர்வைத் தூண்டும் பாடல்

Bahadur Shah
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
மலையாள கரைதனிலே இரத்த ஆற்று ஓட்டம்
மாப்பிள்ளைமார் சேவைகளை நினைவுபடுத்திக் காட்டும்
கலையாக சுதந்திரத்தை காத்ததெங்கள் கூட்டம்
கையை நெஞ்சில் வைத்து பதில், கூற என்ன வாட்டம்?
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
பற்றுமிக்க பரம்பரையில் ஹைதர் அலி பிறந்தான்
பாரகமே மெச்சும்படி நாட்டுத் தொண்டு புரிந்தான்
வெற்றிமுரசு கொட்டி முதலில் வீரன் திப்பு எழுந்தான்
வெள்ளையனை வெருட்ட எண்ணி போர்க்களத்தில் மடிந்தான்
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
வங்காள புரட்சியிலே வரிந்துக் கட்டிய சமூகம்
வடித்ததுவே ஜாலியன்வாலாபாத்தில் எங்கள் உதிரம்
எங்கேனும் எம்மவர்கள் செய்ததுண்டோ கலகம்
என்றாலும் செய்தது வீரமிக்க தியாகம்
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
பஞ்சாபு படுகொலையின் சரித்திரத்தை புரட்டி
படித்துப் பார்த்தால் அழைத்திடுவீர் இருகரங்கள் நீட்டி
வஞ்சகரை எதிர்த்து வளைந்ததெங்கள் ஈட்டி
வாழும்வரை கோருகின்றோம் நெஞ்சை பிளந்துக் காட்டி
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
பொன்னகரம் டெல்லியிலே பகதுர்ஷா ஆண்டான்
பொறுமையுடன் சுதந்திரமே பெரிதனவே கொண்டான்
தன்மான பிள்ளைகளை பலியிடவும் துணிந்தான்
தள்ளாத வயதினிலே பர்மாவிலே மாண்டான்
இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்
-  புலவர் ஆபிதீன்
இந்தப் பாடலை இசைமுரசுவின் குரலில் வீடியோவில் காண
தொடர்புடைய சுட்டி : ஜின்னாவும், விடுதலையும் – ஏ.ஹெச்.ஹத்தீப்
                                                    இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு
                                                   நாகூர் ஹனிபாவின் தமிழுணர்வு பாடல்கள்
                                                  மறக்குமோ நெஞ்சம் – புலவர் ஆபிதீனின் பாடல்
                                                 இறைவன் மேல் ஆணை – புலவர் ஆபிதீனின் பாடல்

நன்றி:  /http://nagoori.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails