Monday, March 13, 2017

சமூக நல்லிணக்க விருது விழா, திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை சார்பாக 11.03.17 அன்று திருநெல்வேலியில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் மூவரில் நானும் ஒருவன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கையால் அவ்விருது வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது. மாலை ஆறரை மணியளவில் மேடையில் அமர்ந்த நான் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நகர முடியாமல் இருந்தேன்! ஒன்பதைரை மணி வாக்கில் ஸ்டாலின் வந்தார்.
என் அருகில் அமர்ந்திருந்த திரு நெல்லை கண்ணன் என்னிடம் பேசிக்க்கொண்டே இருந்தார். இல்லை என்னிடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொன்னதில் நிறைய அரசியல் சமாச்சாரங்கள் இருந்ததால் எனக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் நான் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு கேட்பது மாதிரியே நடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தேன்!

Friday, March 3, 2017

கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண் (உம்மத்)


;இறைவனை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பெண் முஸ்லிம் பெண் எனப்படுகிறாள். அவள் தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை விட்டுக் கொடுக்கக்கலாகாது.

தற்போது நாம் காணும் உலகம் ஆடம்பரங்கள் நிறைந்ததாகவும், கலாச்சாரங்களைச் சீரழிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்ணினம் உயிருடன் புதைக்கப்பட்டும், சிதையில் ஏற்றப்பட்டும் வதைக்கப்பட்டது. 1987 ல் இந்தியாவில் மான்சிங் என்பவர் இறந்துவிட்டதால் பச்சிளம் பெண்ணான ரூப்கன்வர் என்பவர் தன்னுடைய கணவனுடைய சிதையில் உயிருடன் ஏற்றப்பட்டால். அவள் துடிதுடித்து கருகிச் செத்ததை இந்தியமக்கள் நேரிலும், மீடியாக்கள் வாயிலாக செய்தியாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

Tuesday, February 28, 2017

அத்தனையும் உன் அருளே..

எனது சூனியத்தில்
எத்தனை மின்னல் !
எனது இருட்டுக்குள்
எத்தனை வெளிச்சம் !
எனது இல்லாமைக்குள்
எத்தனை கொடைகள் !

Tuesday, February 21, 2017

பிப்ரவரி-21 சர்வதேச தாய்மொழி தினம்

'வரலாறும், இலக்கியமும் இரு கண்கள்...' என இன்றைய தலைமுறையினர் கருத வேண்டும். அப்போதுதான் தங்களது சொந்த வரலாறு அறிந்து, தங்களுக்கே உரிய பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பேணி வாழ ஏதுவாக இருக்கும். காலம் கடந்து நிற்கும் சிறப்பு இலக்கியங்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு சமூகமும் தங்களது தனித்த அடையாளத்தை, பாரம்பரியச் சிறப்பை, வாழ்வியலை இலக்கியமாக வடித்து எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். இக்கடமையை முந்தைய தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் செம்மையாகச் செய்து வந்தனர். படைப்பிலக்கியங்களில் பெரும் பங்களிப்புச் செய்து தமிழ்மொழிக்கும் அழகு சேர்த்தனர்.

Thursday, February 9, 2017

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலாச்சார பயணம் 18.02.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால அரபி மொழி கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவை இருந்து வருகிறது.
அரபி மொழி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் கொண்ட நூலகம், பாரம்பர்ய பொருட்கள், அமீரகத்தின் பழங்காலம் குறித்த தகவல்கள், பழங்கால தொலைபேசி உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்த குழுவினர் தமிழகத்தின் நீடூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

Wednesday, February 8, 2017

யார் தடுப்பார் ?..எவர் தடுப்பார் ?...

J Banu Haroon
இங்கே தாலியும் புர்காவும் பற்றிப்பேச ...
யாருக்கும் தகுதியில்லை .நகர்ந்து நில் !...
அவளின் உரிமை ...அவளின் கலாச்சாரம் ...
அன்னியனுக்கிங்கே என்ன வேலை?...
வடக்கே ஒருவர் பேச ...
தெற்கே ஒருவர் கூவ ...
கிழக்கே ஒருவர் கேவ ...
மேற்கே ஒருவர் மாய ...
என்ன கேலிக்கூத்திது ?...
யார்தந்த உரிமையிது ?..
எந்தமத உரிமையை ...
எந்தமதம் தட்டிப்பறிப்பது ?...
எந்த மனிதனின் உரிமையை ..
எந்த மனிதன் எட்டித்தடுப்பது ?.
யாரது ராஜா ?..எட்டுத்திக்கும் கொடிபறக்க ....
யாருக்கேணும் தூக்கட்டும் கூஜா !...

LinkWithin

Related Posts with Thumbnails